சென்னை, ஆகஸ்ட் 07:
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றது.. ஒவ்வொரு நாளும் கீழே இறங்காமல், அதிகரிக்கும் நோக்கில் தான் உள்ளது. குறிப்பாக வாரத்தின் தொடக்கமான திங்கட்கிழமை ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை இந்த உயர்வு 600 ரூபாயாகவும், நேற்று 80 ரூபாயாகவும் அதிகரித்தது. இதன் பின்பு, கடந்த நாள் ஒரு சவரன் தங்கம் ரூ.75,040-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,400-க்கு விற்பனையாகிறது, இது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரிப்பாகும். ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரனின் தற்போதைய விலை ரூ.75,200-க்கு சென்றுள்ளது.
வெள்ளி விலையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.127-க்கு விற்பனையாகிறது, இது கிராமுக்கு ரூ.1 அதிகரிப்பு. பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் என்ற அளவில், ஒரே நாளில் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.சென்னை, ஆகஸ்ட் 07: