சென்னையில் 32 இடங்களில் இலவச ‘வைஃபை’ : எந்தெந்த இடங்களில் தெரியுமா?

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய சுற்றுலாத் தலங்களான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில், பொதுமக்கள் தங்கு தடையின்றி இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் இலவச ‘வைபை’ வசதியைத் தமிழக அரசு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

முன்னதாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த இலவச வைபை மையங்கள், தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.

32 இடங்கள் என்னென்ன?

சென்னையில் உள்ள முக்கியக் கடற்கரைப் பகுதியான மெரினாவில் உழைப்பாளர் சிலை பகுதியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மொத்தம் 27 இடங்களில் இலவச ‘வைஃபை’ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இரண்டு கடற்கரைகளிலும் சேர்த்து 32 இடங்களில் பொதுமக்கள் இனி இலவசமாக அதிவேக இணையச் சேவையைப் பெற முடியும்.

இலவச ‘’வைஃபை’’ சேவையை இணைப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் ‘Wi-Fi’ வசதியை ஆன் செய்யவும்.

திரையில் தோன்றும் தமிழக அரசின் இலவச வைபை இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

அப்போது திரையில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்தவுடன், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) உங்கள் எண்ணிற்கு வரும்.

அந்த OTP எண்ணை உள்ளீடு செய்தவுடன், உங்களுக்கான இலவச வைஃபை செயல்ப

Related Post

Latest News