இலவச மருத்துவ முகாம் : ரோட்டரி கிளப், சின்னத்திரை நடிகர் சங்கம் இணைந்து சாதனை!

Free medical camp: Rotary Club, Small Screen Actors Association join !

சென்னை, நவம்பர் 10:

ரோட்டரி கிளப் சென்னை கோரல் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு முன்னணி மருத்துவமனைகள் பங்கேற்ற இந்த முகாமில், குறிப்பாக பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இந்த சிறப்புமிக்க நிகழ்வுக்கு ரோட்டரி கிளப் சென்னை கோரல் மாவட்ட ஆளுநர் தேவேந்திரன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், சாசனத் தலைவர் சுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் சாய் சங்கர் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் குழுவினர் உடனிருந்தனர்.

சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் தலைவர் பரத் மற்றும் நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, மாமன்ற உறுப்பினர் எம். ராஜா மற்றும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியனின் மாநில பேச்சாளர் ஜோ.மைதிலிகோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை