சென்னை, ஆகஸ்ட் 11:
சென்னையில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 10-வது நாளாக போராட்டத்தில் இருந்துகொண்டிருக்கும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, அரசு வழங்கிய பணி நிரந்தரம் மற்றும் ரூ.23,000 ஊதியங்களை மாற்றம் செய்யக்கூடாது என்று தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தனியார் மயமாக்கலைத் தேமுதிக கடுமையாக கண்டிக்கின்றது. வரிவசூலிப்பது அரசு, அரசியையும் தனியார்மயமாக்க முடியாது என்று பிரேமலதா தெரிவித்தார்.
ஜெயலலிதா ஒரு சாதனைப்பெண்மணி, இரும்புப்பெண்மணி. ஜெயலலிதா இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதாதான். ஜெயலலிதா போன்று சிங்கப்பெண்ணாக நான் இருப்பதாக சுதீஷ் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் பல சவால்களை சந்தித்த ஜெயலலிதா என் ரோல் மாடல் என கூறியிருக்கிறேன். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக அறிவித்தவர் விஜயகாந்த். கேப்டனை மானசீக குரு என சொல்பவர்கள் அவரது படத்தை புகைப்படத்தை பயன்படுத்தலாம்.
இந்நிலையில், ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளதுபோல் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்ட புகைப்படத்தால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுதீஷை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சமீபத்தில் சந்தித்த நிகழ்வும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.