சென்னை, ஆகஸ்ட் 13:
அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.மைத்ரேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடந்த 2002 முதல் 2019 வரை மூன்று முறை அதிமுக மாநிலங்களவை எம்.பியாக இருந்தவர்.மேலும் கட்சியின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர். அதிமுகவில் நிகழும் குழப்பங்களால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின் பாஜகவிலும், மீண்டும் அதிமுகவில் சில மாதங்கள் இருந்துவிட்டு தற்போது திமுக -வில் இணைந்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மைத்ரேயன், பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் 1999 ஆம் ஆண்டு இணைந்தார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். இதையடுத்து. 2023 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், பின்னர் 2024 இல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார்.