வெளிநாட்டு முதலீடா..வெளிநாட்டில் முதலீடா? – விஜய் விமர்சனம்

Condemnation of DMK, alliance power - Tvk

நாகை, செப்டம்பர் 20:

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் நடந்த பிரசார நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய விஜய், சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தபின், அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினம் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் திரண்டனர்.

புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே பகல் 1 மணிக்கு நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்துக்கு கடுமையாக விமர்சனம் செய்தார்.

  • மீனவர்களின் கஷ்டத்தை கடிதம் எழுதியாலும்கூட சாதியினால் அமைதி காக்க முடியாது. அதேபோல், இந்திய மீனவர்கள் மற்றும் தமிழகம் என்று பிரித்து பார்க்கும் பாசிச பாஜக அடிப்படை இல்லை.
  • பாரம்பரிய கடல் சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம்.
  • CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா..
  • ஒவ்வொரு முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவரும் போதெல்லாம் சிரித்துக்கொண்டே பேசுகிறார் CM.
  • கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்காமல் சொந்த கும்பத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!