11
சென்னை, ஜூலை 11:
சென்னை மாநகராட்சி புதிய பாலம் அமைக்க டெண்டர் கோரி உள்ளது. வேளச்சேரியில் ரூ.231 கோடியில் மேம்பாலம் அமைக்க டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி. வேளச்சேரி குருநானக் கல்லூரி சந்திப்பில் இருந்து கிண்டி வரை மேம்பாலம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்குருநானக் கல்லூரியில் இருந்து கிண்டி ஐந்து ஃபர்லாங் சாலை சந்திப்பு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.