அடையாறு, கொசஸ்தலையாற்றில் வெள்ள நீர் திறப்பு: நீர்வளத்துறை

Flood water released in Adyar and Kosasthalai rivers

சென்னை, அக்டோபர் 22:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையின் முக்கிய நீர்நிலைகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து நீர்வளத்துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வெள்ளநீர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, ஏரிகளுக்கு இடையில் போதுமான இடைவெளி மற்றும் பாதுகாப்பான நீர்மட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், மிக கனமழை பெய்தாலும்கூட வெள்ளநீர் திறப்பின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வெளியேற்றப்படும் நீர் அடையாறு மற்றும் கொசஸ்தலையாறு வழியாக பாதுகாப்பாக கடலுக்கு சென்றடையும் வகையில் தொழில்நுட்பமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நீர்மட்ட நிலைமையும், நீர்வரத்து வேகமும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்றும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் நீர்வளத்துறை விளக்கியுள்ளது.

Related posts

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!

நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனம்..!