4
காஞ்சிபுரம், பிப்ரவரி 23:
காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என மொத்தம் நான்கு தொகுதிகள் உள்ளன.
மேலும், மொத்த வாக்காளர்கள் 1,19,2104 பேர். மொத்த வாக்குச்சாவடிகள் 1545. வாக்காளர் பட்டியலில் இருமுறை பெயர் இருந்து நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,719 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.