சென்னை, ஜூலை 9:
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. ரத்னகார் மாவட்டம் பனுடா கிராமத்தில் இந்த விமானம் வழக்கமான பயிற்சியின் போது விழுந்தது.
இந்த விபத்தில் விமானி உள்பட இருவர் பலியாகியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலியானவர்களின் அடையாளங்கள் மற்றும் விபத்து காரணம் குறித்து ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கிராம மக்கள் திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் பகுதியில் கரும்புகை எழுந்ததாகவும் தகவல் அளித்துள்ளனர். விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன், மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா, காவல் துறையினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் உடனடியாக விபத்து இடத்திற்கு சென்றுள்ளனர்.மேலும் விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.