சென்னை, ஜூலை 22:
சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் தனது 7 வயது மகளை கொலை செய்து, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சதீஷ்குமார் நேற்று இரவு ஆலந்தூர் விம்கேஎச் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அதிகாலை 5 மணியளவில் இவர் தன் அக்காவிற்கு தொடர்பு கொண்டு “நான் என் மகளை கொலை செய்துவிட்டேன். தானும் தற்கொலை செய்யப்போகிறேன்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்து, ஓட்டலுக்கு சென்று பார்த்தபோது, சதீஷ்குமார் தனது மகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, தன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் இருந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் பரங்கிமலை போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர், முதற்கட்ட விசாரணையில், சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி கடந்த ஒரு ஆண்டாக குடும்ப பிரச்சனைகளால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவி மகளை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு தொடர்ந்த பிரச்னைகள் செய்து வந்துள்ளார்.இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சதீஷ்குமார் தனது மகளை கொன்று தானும் தற்கொலை முயற்யில் ஈடுபட்டது தெரிய வந்தது .மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்