டெல்லி, ஜனவரி 16:
திருவள்ளுவர் நாளையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று தைப்பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் இன்று திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.