டெல்லி,செப்டம்பர் 16 :
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்துடன், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருடன் கூட்டமும் நடைபெற உள்ளது. மேலும், சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் பதவி ஏற்ற சி.பி. ராதாகிருஷ்ணனை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இவருடன், அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, தங்கமணி உள்ளிட்டோர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், தனபால் மற்றும் இன்பதுரை போன்றோர் வரவேற்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கான அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சியினர்களை மீண்டும் இணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும் என கே.ஏ. செங்கோட்டையன் கடுமையாக எச்சரித்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கான 10 நாள் கால கட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு சென்றுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம், அதிமுகவின் முன்னெடுத்த முயற்சிகள் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பில் புதிய பரிமாணங்கள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.