சென்னை, பிப்ரவரி 03:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தலைமை கழக செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.