டெல்லி, செப்டம்பர் 16:
குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்
டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அரசியல் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக எம்பிக்களும் கலந்து கொண்டனர்.
அதிமுக-பாஜக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் நீட்டி வரும் நிலையில் , எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முக்கிய அரசியல் ஆலோசனைகள் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.