உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

EPS meets Home Minister Amit Shah

டெல்லி, செப்டம்பர் 16:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாயை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக அவர் டெல்லி சென்றிருந்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை மற்றும் சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடன் இருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மூத்த நிர்வாகியான கே.ஏ.செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்து, கட்சியில் பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பதற்கு உரையாடியதைத் தொடர்ந்து, தற்போது எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்திருப்பது அரசியலில் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அதிமுக உட்பட தேர்தல் ஒருங்கிணைப்புகளைப் பற்றியும் இரண்டு தலைவர்கள் பேசியிருக்க வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை நேரடியாக கோவைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!