SIR பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் – அதிமுகவினருக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்

EPS instructs ADMK members to be serious about SIR work

சென்னை, நவம்பர் 25:

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் கட்சியினர் முழுமையாக ஈடுபட வேண்டும் என அவர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அவர் மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து 82 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது, தங்கள் பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நிலவரம் குறித்து அவர்கள் விவரிக்கவும், பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைக்கவும் செய்தனர்.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவினர் அனைவரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். முறைகேடாக பதிவான ஓட்டுகள் நீக்கப்படும் வண்ணம், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் கட்சியினரின் பெயர்கள் சரியாக இடம்பெற்றுள்ளனவா என்பதை உறுதிசெய்ய மாவட்டச் செயலாளர்கள் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததாகவும், வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!