புதுக்கோட்டை, ஆகஸ்ட் 07:
அரசு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பயன்படுத்துவதை பெறுமையாகக் கருதியதாக அமைச்சர் எஸ். ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி படத்தை பயன்படுத்தியதாகவும், மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வழங்கப்பட்டாலும் அந்த சட்ட மசோதா ஒப்புக்கொள்ளப்படாதுள்ளதாகவும் அவர் கூறினார். கட்சி வேறுபாடு என்பதை அவர் மறுத்து, “எந்த நிகழ்ச்சிகளுக்கே முதல்வர் பெயரை சூட்ட வேண்டும் என்பது கடமை” என்று பேசினார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததை வரவேற்கக்கூடியது என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா? இல்லை… மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுடைய உழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கின்ற முயற்சிக்கு கிடைத்து உள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.
திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி பதில் என்ன என்பதைக் காத்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு சார்ந்த சான்றிதழைப் பெற எதிர்க்கட்சி கொடுக்கும் நிலை இல்லை என்றும், மக்கள் தான் நற்சான்றிதழ் வழங்குவதாகவும், “எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்” எனக் கூறினார்.
திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் போலீஸ்காரரை தாக்கி தப்பச் சென்றதால் என்கவுண்டர் சம்பவம் ஏற்பட்டது, காவல்துறைக்கு மேலதிக பாதுகாப்பு தேவையில்லை என்றும், சில சமயங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை தவிர வேறு எங்கு நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “வட மாநிலங்களில் மோசமான சம்பவங்கள் அதிகம், தொழில் வளர்ச்சி, வசிப்பிடத்திற்கு ஏற்ற ஒரே மாநிலமே தமிழ்நாடு” என்றும், “ஆணவ படுகொலைகள் மாறுபட்டதாக இல்லை; இருந்தால் தடுத்துவிடுவோம்” என்றும் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தினர்.