இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி 2-1 என்ற முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்டிருந்த ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி, அண்மையில் ஜிம் பயிற்சியில் ஈடுபடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனை மூலம் தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோன்று, மற்றொரு வீரர் அர்ஷ்தீப் சிங்கும் பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து, பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிதிஷ்குமார் ரெட்டி முழு தொடரிலிருந்து, அர்ஷ்தீப் சிங் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் அரியானாவைச் சேர்ந்த 24 வயது வேகப்பந்து வீச்சாளர் அன்ஜுல் கம்போஜ் புதிய வீரராக சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அன்ஜுல், சமீபத்தில் இந்திய ஏ அணியில் விளையாடி இங்கிலாந்து லயன்ஸ் அணி எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி குறிப்பிடத்தக்கது. மேலும், ரஞ்சி கோப்பையில் கேரளாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை செய்தவர் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது.
4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில்:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ் மற்றும் அன்ஜுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.