45
சென்னை, செப்டம்பர் 11:
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தவெகக் கட்சியின் தலைவர் விஜய் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சி சென்னை பனையூர் பகுதியில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் , சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.