சென்னை, ஏப்ரல் 03:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் சட்டசபை தொகுதி வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நகரம், ஒன்றியம், வட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.
திமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் தேர்தல் பணிகள், தொகுதியின் வெற்றி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
சட்டசபை தொகுதிகளில் வெற்றியை நிலைநாட்ட செய்ய வேண்டிய பணிகள் குறித்து வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
அதற்கு முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட திமுக வார்ரூமுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

