சேலம், செப்டம்பர் 22:
சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார் . பின்னர் தொடர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோருடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றனர்.
அங்கு மூவரும் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து நயினார் நாகேந்திரன், மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக தெரிவித்தார்.
இதன்பின், சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களை நேரில் சந்தித்து பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்குவதைப் பற்றி மட்டுமே ஆலோசனை மேற்கொண்டதாக கூறினார். மேலும் 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி நடைபெறும் என்று விஜய் தெரிவித்துள்ளார் என்பது அவர் தனிப்பட்டகருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது” என்றார்.