ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்

Election Commission denies Rahul's allegations

டெல்லி, செப்டம்பர் 18:

வாக்காளர்களை நீக்க முயற்சித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு திருட்டு முயற்சி நடந்ததாக சான்றுகளுடன் பரபரப்பை எழுப்பியிருந்தார். அவர் யாருடைய அறிவு இல்லாமலும் பக்கத்து வீட்டார் பெயர் பயன்படுத்தி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், கால் சென்டர்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் முற்றிலும் மறுத்து, “ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவறானவை; எந்தவொரு வாக்காளர் பெயரையும் ஆன்லைனில் நீக்க முடியாது. 2023 ஆலந்து தொகுதியில் கடந்த தேர்தலில் வாக்காளர்களை நீக்க முயற்சிகள் தோல்வியடைந்தன. இவைகளுக்கு விசாரணை நடத்தும் முதல் தகவல் அறிக்கை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் ஆய்வுகளின் படி, ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் 2018 தேர்தலில் பாஜக வேட்பாளர் சுபாத் குட்டேதரும், 2023 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு