சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ED raids 10 places in Chennai!

சென்னை, நவம்பர் 19:

சென்னையில் இன்று காலை முதல், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவகங்கள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்த புகார்கள் அடிப்படையில், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

21 வாகனங்களில் 10 குழுக்களாக சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் இருக்கின்ற சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பு, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீடு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி, அம்பத்தூர் திருவேங்கடா நகரில் பிரகாஷ் வீடு ஆகிய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் செயல்பாடு சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து தொடர்ந்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்