திருச்சி, ஜூலை 21:
திருச்சி விமான நிலையத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம் அந்த வகையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் இருந்த பெட்டிகளில் தடை செய்யப்பட்ட 250 இ-சிகரெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியின் உடமைகளை பறிமுதல் செய்த பின்னர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ரூ.6.25 லட்சம் என தெரிவித்துள்ளனர்.