கேப்டன் காட்டன் கால்வாயில் தூர்வாரும் பணி – உதயநிதி ஆய்வு

Dredging work in Captain Cotton Canal - Udayanidhi Survey

சென்னை, அக்டோபர் 27:

வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மழைகால முன்னெச்சரிக்கை பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து நேரில் பார்வையிட்டார்.

வியாசர்பாடி கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளும், கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் துணை முதலமைச்சருடன் அமைச்சர் கே.என். நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரும் ஆய்வில் பங்கேற்றனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர், முதல்வரின் அறிவுறுத்தலின் கீழ் இந்தப் பகுதிகளில் பருவ மழைக்கு முன்னதாக ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பூர்த்தியாக ஆய்வு செய்யபட்டுள்ளன என தெரிவித்தார்.

வட சென்னை நகராட்சியின் மூலம் 18 கால்வாய்கள் மற்றும் 13 குளங்கள் தூர்வாரப்பட்டு சுமார் 331 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுகள் அகற்றப்பட்டு, மூன்றரை லட்சம் டன் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் வரும் புகார்களை உடனடியாக கவனிப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

முக்கியமாக, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி குளம், கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் கால்வாய் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் பெரிய மழை எதிர்பார்க்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக அடிப்படையில் எந்த அளவிற்கு மழை பெய்தாலும் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உறுதி செய்தார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!