சென்னை, ஆகஸ்ட் 30:
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அதிமுக கட்சித் தலைமையகத்தில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார். அவர், “அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை. அதுபோல நாமும் அவரை பற்றி பேச தேவையில்லை” எனக் கூறினார் , மேலும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த தேவையற்ற விவாதங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். கூட்டணிக்குள் கலகம், சிக்கல்கள் உருவாக விடக்கூடாது என்று நிர்வாகிகள் எச்சரிக்கப்பட்டனர். மேலும், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணிகளை வேகமாக செய்யும் படி அதிகாரிகளுக்கு கடமை வகுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லை பகுதியில் நடைபென்ற பாஜக கூட்டத்தில் அண்ணாமலை “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக பாடுபட வேண்டும்” என்று கூறியது குறிப்பிடதக்கது.