டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை

Donald Trump supporter Charlie Kirk shot dead

அமெரிக்கா, செப்டம்பர் 11:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் மற்றும் வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் கழுத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர் ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஆவார். அவர் உட்டா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சார்லி கிர்க்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிப்படுத்தியதும், சார்லி கிர்க் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் இளைய தலைமுறையில் உள்ள வன்முறை அதிகரிக்கும் சூழலில் நிகழ்ந்தது என்பதால், இது அரசியல் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

Related posts

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம்: டொனால்டு டிரம்ப்

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம்

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி