திமுக முப்பெரும் விழா : கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்

DMK's grand festival begins

கரூர், செப்டம்பர் 17:

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் ஈவெரா பிறந்த நாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கரூா் கோடங்கிப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி மரியாதை செய்தார்.

விழா தொடங்கும் முன்பு, பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகிய தலைவர்களின் புகைப்படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலின் விழா மேடைக்கு வருகை தரவே, பொதுமக்கள் அவரைக் கையெசைத்து வரவேற்றனர்.

இந்த விழாவிற்கு கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார். இளைஞரணி செயலர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலர் கே.என்.நேரு மற்றும் துணைப் பொதுச் செயலர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோரும் வாழ்த்துரை ஆற்றினார்.

விழாவில் பெரியார் விருது கனிமொழி எம்.பி.க்கு, அண்ணா விருது பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சு.ப.சீதாராமனுக்கு, கலைஞர் விருது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் விருது கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் மறைந்த குளித்தலை சிவராமனுக்கு குடும்பத்தினருக்கு முன் வழங்கப்பட்டது.

பேராசிரியர் விருது ஆதிதிராவிடர் நலக்குழு தலைவருக்கும், நட்சத்திர விருது மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலர் பொங்கலூர் நா.பழனிசாமிக்கும் வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் ஏ. எஸ். பன்னீர்செல்வத்துக்கும் முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருது வழங்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் நான்கு முக்கிய மாவட்டங்களின் ஒன்றியம், நகரம், பகுதிகளில் கட்சிக்காக சிறப்பாக பணியாற்றிய பலரை முதல்வர் நற்சான்றிதழ்கள் மற்றும் பணமுடிப்பு வழங்கி கௌரவித்தார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!