நவ. 29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

DMK MPs' meeting begins under CM stalin

சென்னை, நவம்பர் 27:

திமுக கட்சித் தலைமை அறிவித்தபடி, வரும் நவம்பர் 29 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவ. 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.

திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை