அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எம்பிக்கள் நோட்டீஸ்

DMK MPS given notice request a discussion on US trade agreement.

டெல்லி, பிப்ரவரி 04:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது.

இந்தநிலையில், இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மக்களவையில் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆகியோர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இதனிடையே நேற்று சீனா ஊடுருவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு