தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும்: கனிமொழி எம்.பி.

DMK govt will fulfill all its election promises: MP Kanimozhi

ஓசூர், ஜனவரி 19:

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

திமுகவின் சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் ஓசூர் வருகை புரிந்துள்ளனர். அப்போது தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழுத் தலைவர் எம்.பி. கனிமொழி பேசுகையில், கடந்த தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை திமுக வழங்கியது. அதில் 404 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு நாளும் தமிழக அரசுக்கு இடைஞ்சல் செய்து வருகிறார்கள். அதற்கு இடையிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.

மத்திய அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என தெரிவித்து வருகின்றனர். ஆனால் முடியாததை முடித்துக்காட்டும் திமுக அரசு. ஓசூரில் விமான நிலையம் அமையும் என நமது தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இங்கு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும் மீதமுள்ள 101 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும். அதனை நிறைவேற்றி காட்டுவோம் என்ற நம்பிக்கையில் உங்களைச் சந்திக்க நாங்கள் வந்துள்ளோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள தனியாக ஒரு ஆன்லைன் போர்டல் (செயலியை) ஏற்படுத்தி உள்ளார். அதில் மக்கள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை தெரிவிக்கலாம். திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொண்டு வருகிறது. ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பே முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்.

அந்த வழியில் ஆன்லைன் போர்டலில் உலகத்தில் எந்த மூளையில் தமிழர்கள் இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை அதில் பதிவிடலாம் எனக் கூறினார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!