திமுக தலைவர் தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

DMK District Secretaries meeting begin

சென்னை, செப்டம்பர் 08:

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை, செப்டம்பர் 9) நடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடக்க உள்ளதைக் கூறியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்வது கட்டாயம் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

கூட்டத்தில் திமுக முப்பெரும் விழா தொடர்பான விவகாரங்கள் மற்றும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை செயல்முறை பற்றியும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!