சென்னை, ஜூலை 16:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் , அதை எதிர்க்கொள்ளும் நோக்கில் திமுக தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (17.07.2025) நடைபெற உள்ளது.
கட்சியின் பொதுச்செயாலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாள் – வியாழக்கிழமை (17.7.2025), காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இதில் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, கூட்டத்தில் தமிழ்நாடு முழுக்க உறுப்பினர் சேர்க்கை குறித்தும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான விவாதங்களும் நடைபெற உள்ளன,” என தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபை தேர்தல் வெகு தொலைவில் இல்லாததால், திமுகவின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம், தேர்தல் ஆயத்தம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.