சென்னை, செப்டம்பர் 09:
திமுக சார்பில் கட்சி உருவாக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை கொண்டாடப்படும் முப்பெரும் விழா வருகிற 17-ந் தேதி கரூரில் நடைபெற உள்ளது. இந்த விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தவுள்ளது.
இந்நிலையில், காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. முப்பெரும் விழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகள் மற்றும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்த ஆலோசனையில் தலைவர் ஸ்டாலினுடம் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் தேர்தல் முன்னேற்றத்தின் முன்னணி அமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.