சென்னை, ஜனவரி 02:
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜன. 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேமுதிக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் ஜன.5 -ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், அனைத்து மாவட்ட செயலா்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.