சென்னை, அக்டோபர் 11:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே வாரியத்தின் அறிவிப்பின்படி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, சென்ட்ரல், மங்களூர், எழும்பூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களை இணைக்கும் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அக்.21 மற்றும் 22-ஆம் தேதிகளில் திருநெல்வேலி இருந்து அதிகாலை 4 மணிக்கு (ரயில் எண்: 06156) புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய நிலையங்கள் வழியாக செங்கல்பட்டிற்கு வந்தடையும். மறுமாற்று ரயில் (எண்: 06155) செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
சென்னை ரயில்கள் தொடர்பாக, போத்தனூர் இருந்து அக்.19-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06044) மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். இதன் மறுமாற்று ரயில் (எண்: 06001) அக்.20-ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூருக்கு சென்றடையும்.
மங்களூரிலிருந்து அக்.21-ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு புறப்படும் (எண்:06002) விரைவு ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும். மறுமாற்று ரயில் (எண்: 06043) அக்.22-ஆம் தேதி சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு போத்தனூர் வந்து சேரும்.
இந்த ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மங்களூருக்கு புறப்படும்.