சென்னை, ஆகஸ்ட் 12:
தமிழ்நாடு அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 2025-26ஆம் கல்வியாண்டுக்காக சுமார் 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான இடைக்கால நடவடிக்கையாக, பல நிறுவனம் தங்களின் விலைப்பட்டியலை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், பிரபலமான டெல் நிறுவனம் 15.6 இன்ச் ஸ்கிரீன் கொண்ட மடிக்கணினி ஒன்றுக்கு ரூ. 40,826 என்ற விலை சமர்ப்பித்துள்ளது. அதேசமயம், ஏசர் நிறுவனம் 14 இன்ச் ஸ்கிரீன் கொண்ட மடிக்கணினி ஒன்றுக்கு ரூ. 23,385 என விலை இருக்கிறது.
இந்த மாத இறுதிக்குள், லேப்டாப் கொள்முதல் ஆணைகள் அரசு தரப்பில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக முதலில் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த முயற்சி, மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட படிக்கத் தேவையான டிஜிட்டல் சாதனங்களை அளிக்கும் முக்கியமான பெரும் திட்டமாகும்.