டெல்லி, நவம்பர் 12:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை 6.52 மணியளவில் ஒரு வெள்ளை நிற ஹூண்டாய் கார் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறிய பெரும் விபத்து ஏற்பட்டது. மக்கள் வந்து செல்லும் பரபரப்பான பகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் சத்தம் அப்பகுதி முழுவதும் கேட்டது; வாகனங்கள் மற்றும் மக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. புகை வான்வரை பரவியது. சாந்தினி சவுக் சந்தை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். சம்பவ இடத்திற்கு உடனடியாக 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின, இருப்பினும் வெடிப்பில் அதிகமாக வந்த 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாய் சேதமடைந்தன. கார் பாகங்கள், மனித உடல்கழிவுகள் சுற்றியுள்ள பகுதிக்குப் பரவின. இந்த பயங்கர நிகழ்வில் 13 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டெல்லி விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
முதலில், கார் சிலிண்டர் அல்லது பேட்டரி வெடித்திருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், புலனாய்வு அமைப்புகளும் போலீசும் தீவிர விசாரணை மேற்கொண்டு வெடிப்பில் பயங்கரவாத திட்டம் உள்ளதா என கருதுகின்றன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காரின் உரிமையாளர்கள், பயன்படுத்திய நபர்கள் குறித்து முழுமையான சிசிடிவி மற்றும் கால் டவுன் பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. வெடிப்பின் காரணமாக தாக்குதல் நடத்த வந்த உமர் முகமது என்ற நபர் இடத்தில் இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பல கைகள் மாற்றப்பட்டு காரைப் பெற்றிருக்கின்றனர் என்பதும் பின்னணியில் உள்ளது.
இந்த விபத்து நடந்த பிறகு, 2 நாட்கள் வௌிநாட்டுப் பயணம் செய்து வந்த பிரதமர் மோடி, டெல்லி விமான நிலையம் வந்தவுடன் நேராக லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, காயமடைந்தவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களும் தெரிவித்தார். இது குறித்து அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.