சென்னை, ஜனவரி 01:
சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 110 உயர்ந்துள்ளது. எனினும், வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஜனவரி 1 ஆம் தேதியான இன்று ரூ. 110 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் ரூ. 868.50 ஆக தொடர்கிறது. எனினும் கடந்த 2 மாதங்களாக வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

