தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி, சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தூரத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந் தேதி வட தமிழகத்தின், புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் கடலோர மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது கடலில் கப்பல்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை அளிக்கிறது. கடலோரப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை மிக அவசியமான காரணத்தால் இந்த 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.