சென்னை, நவம்பர் 29:
டிட்வா புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இப்போது இலங்கையிலிருந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோர முகாமுக்கு வடக்கு நோக்கி முன்னேறவிருக்கிறது. இதனால் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, மாநில பேரிடர் மீட்புப் படை 16 அணிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை 12 அணிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், காஞ்சிபுரத்தில் டிட்வா புயல் பாதிப்புகள் தொடர்பாக மக்கள் புகார் அளிக்க எதவி எண்கள் அறிவித்துள்ளது
அந்த வகையில், 044 – 27237107 என்ற தொலைபேசி எண்ணிலும் 8056221077 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.