33
சென்னை, நவம்பர் 29:
வட தமிழக கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டத்தையொட்டி டிட்வா புயல் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் முன்னெரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் தெரிவித்திருப்பதாவது:
- முதலமைச்சரின் கட்டளையின் பேரில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முழு தயார் நிலையில் உள்ளனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மாநில பேரிடர் மீட்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் முழு எச்சரிக்கை நிலையில், அவசரநிலை செயல்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன.
- மாநில கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மாவட்டங்களுக்கு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
- பொதுமக்கள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு அவசர தேவைகளுக்கான முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் டிட்வா புயலின் பாதிப்பு மற்றும் கனமழை காரணமாக பொதுமக்களுக்கு அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றவும், தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும் அரசு வலியுறுத்தியுள்ளது.