டிட்வா புயல்: 54 விமானங்களின் சேவைகள் ரத்து

Cyclone Titva: 54 flights cancelled

சென்னை, நவம்ப 29:

டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சென்னை விமானநிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகங்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

டிட்வா புயல் காரணமாக இன்று சென்னை விமானநிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்களும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 12 விமானங்களும், சென்னை, பெங்களூர், மும்பை நகரங்களில் இருந்து மதுரைக்குப் பயணிக்கும் 11 சிறிய விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு வருகை தரும் 1 விமானமும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை