சென்னைக்கு 50 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்

Cyclone Titva 50 km from Chennai

சென்னை, டிசம்பர் 01:

சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள டிட்வா புயல் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதன்படி, டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக – புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது. இது மணிக்கு 10 கி. மீ. என்ற வேகத்தில் வடதிசையில் நகர்ந்து, சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதிக்கும் வடதமிழகம் – புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தொலைவு 40 கி.மீ. ஆக இருக்கிறது. இதன் காரணமாக, இன்று நண்பகல் வாக்கில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கு 200 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை