பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

Custom raid Prithviraj and Dulquer homes

கேரளா,செப்டம்பர் 23:

கேரளாவில் மலையாள நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்கு கடத்தியதாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை குறித்து தற்போது வரை எந்த சந்தேகமான வாகனங்களும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்படவில்லை. கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்விராஜ் நடித்த ‘எம்புரான்’ படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடைபெற்றது.

Related posts

ரஜினி – கமல் படத்தின் புரோமோ!

மகா சிவராத்திரி விழா – நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி, சாரா பங்கேற்பு

“ஜனநாயகன்” படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்