கடலூர், ஜூலை 8:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வேன் மீது நேரடியாக மோதியது. ரயில் மோதியதில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது.
இதில் 2 மாணவர் , ஒரு மாணவி என 3 பேர் உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலர் படுகாயங்களுடன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தென்னக ரயில்வே சார்பாக நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு 2.50 லட்சம் ரூபாயும், காயமடைந்த குழந்தைகளுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.