சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

CPI leader Nallakannu admit to hospital again

சென்னை, அக்டோபர் 16:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ர். நல்லகண்ணு, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கடந்த ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பின் கடந்த வாரம் வீடு திரும்பிய நல்லகண்ணுக்கு மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால், இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லகண்ணு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் முறைப்பாட்டுக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றவும் செய்யப்பட்டார்.

இதனிடையே, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்லகண்ணுக்கு மூத்த மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (அக். 10) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நல்லகண்ணுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை