தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – சீமான் விளக்கம்

contesting against Vijay? - Seeman

சென்னை, செப்டம்பர் 24:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேட்டி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். தவெகவினர் விமர்சிப்பதைப் பார்த்து ரசித்துவிட்டு செல்ல வேண்டியது தான். பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் கொள்கை வித்தியாசம் என்ன? கொள்கை வேறு, அரசியல் வேறு கிடையாது; கொள்கையே அரசியல். பாஜக உங்கள் கொள்கை எதிரி என்றால், காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா?

விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு அண்ணனாக தம்பிக்கு அறிவுரைகளை சொல்கிறேன். இப்போது சரி செய்து கொள்ளவில்லை என்றால், வேறு அரசியல் கட்சிகள் எடுத்துச் சொல்வார்கள்.

மனசாட்சி இல்லாமல் மத்திய அரசு வரி விதிக்கிறது. மக்களுக்கு சுமை என்று தெரிந்தும் ஜிஎஸ்டி வரி விதித்தது ஏன்? ஜிஎஸ்டியை கொண்டு வந்ததற்காக அரசு மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!