கேரளாவில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு – காங்கிரஸ் வாக்குறுதி

கேரளம், ஏப்ரல் 03:

கேரள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் வெளியிட்டார்.

அதில் இடம்பெற்ற வாக்குறுதிகள் விவரம் வருமாறு,

  1. இந்திரா உத்தரவாதம் அடிப்படையில், கேரள அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும்.
  2. கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். ஓய்வூதியத் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  3. உம்மன் சாண்டி சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
  4. படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  5. பெண்களுக்கு ‘குடும்பஸ்ரீ’ என்ற மகளிர் சுய உதவிக்குழு போல, ஆண்களுக்கு சுய உதவிக்குழுவாக ‘யுவஸ்ரீ’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
  6. ஆன்லைன் டாக்சி திட்டத்தில் ஏற்படும் குறைபாடுகளை பரிசீலித்து, அவற்றை உரிய முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் டாக்சி வாடிக்கையாளர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் அமைக்கப்படும்.
  7. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தரையில் கிடக்கும் நிலையை மாற்றி, சிகிச்சைக்காக அனுமதிக்கும்போது கட்டாயமாக படுக்கை வசதி செய்து தரப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RELATED NEWS

Latest News